ரூ.3¾ கோடியில் சாலை அமைக்கும் பணி
மணல்மேடு அருகே ரூ.3¾ கோடியில் சாலை அமைக்கும் பணி
மணல்மேடு:
மணல்மேடு அருகே வரகடை கிராமத்தில் தொடங்கி நாராயணமங்கலம், திருவாளபுத்தூர் வழியாக கடக்கம் வரை சாலை சேதம் அடைந்து காணப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம் கீழ் ரூ.3.73 கோடி மதிப்பீட்டில் புதிதாக சாலை அமைக்கும் பணி தொடங்கியது. இந்த பணியினை ராஜகுமார் தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட குழு உறுப்பினர் இளையபெருமாள், ஒன்றிய பொறியாளர் ராஜேஷ்கண்ணன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஊராட்சி தலைவர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.