நாய்கள் கடித்து 3 கன்றுகுட்டிகள் செத்தன

கபிலர்மலை அருகே பரபரப்பு நாய்கள் கடித்து 3 கன்றுகுட்டிகள் செத்தன.

Update: 2023-02-07 18:45 GMT

பரமத்தி வேலூர்

பரமத்திவேலூர் தாலுகா, கபிலர்மலை அருகே உள்ள இருக்கூர் தெற்கு வலசுபாளையம் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து விவசாயி. இவரது மனைவி ஜெயந்தி இவர்கள் அவர்களது தோட்ட பகுதியில் மாடுகளை வளர்த்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு தோட்டப் பகுதியில் கட்டப்பட்டிருந்த மாடுகள் மற்றும் கன்று குட்டிகளுக்கு தீவனங்களை போட்டுவிட்டு வீட்டிற்கு சென்று விட்டனர். இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் மாடுகளுக்கு தீவனம் போடுவதற்காக வந்தபோது அங்கு கட்டப்பட்டிருந்த 3 கன்றுகுட்டிகளை நாய்கள் கடித்து குதறிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அருகில் சென்று பார்த்தபோது 3 பசுங்கன்றுகளையும் நாய்கள் கடித்து குதறி கொன்றுள்ளது. தகவல் அறிந்து அங்கு வந்த ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர் நேரில் ஆய்வு செய்தனர். ஆய்வில் கன்றுகளை கடித்து கொன்றது நாய்கள் என்பது தெரியவந்தது. இதனையடுத்து கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பரமசிவம் மற்றும் துரைசாமி ஆகியோரும் நேரில் சென்று ஆய்வு செய்தனர். ஏற்கனவே இருக்கூர் பகுதியில் சிறுத்தைப்புலி நடமாட்டத்தால் அச்சம் அடைந்துள்ள பொதுமக்கள் நேற்று முன்தினம் இரவு 3 கன்றுகுட்டிகளை நாய்கள் கடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்