ராமேசுவரம் கடற்கரை பகுதியில்3 உடல்கள் மீட்பு

ராமேசுவரம் கடற்கரை பகுதியில் 3 உடல்கள் மீட்கப்பட்டது.

Update: 2023-05-04 18:45 GMT

ராமேசுவரம், 

ராமேசுவரம் சங்குமால் கடற்கரை பகுதியில் பெண் பிணம் ஒன்று கிடப்பதாக கடலோர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கடலோர போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு 70 வயது மதிக்கத்தக்க பெண் பிணமாக கிடந்தார். அப்பகுதியில் கிடந்த பையை சோதனை செய்த போது அந்த பெண் கோவையை சேர்ந்த சோலையப்பன் மனைவி பழனியம்மாள்(வயது 70) என்று தெரியவந்தது. அதேபோல் அக்னி தீர்த்த கடற்கரை அருகே ஆண் பிணம் கிடப்பதாக கிடைத்த தகவலின்பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்தனர். அப்போது 65 வயது மதிக்கத்தக்க முதியவர் பிணமாக கிடந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. 2 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே துறைமுக கடற்கரை வடபகுதியில் ஒரு ஆண் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கடலோர போலீசார் அங்கு சென்று இறந்தவர் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அதில் இறந்தவர் ராமேசுவரம் மார்க்கெட் அருகே விளையாட்டு மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த அரவரசன்(42) என்பது தெரிய வந்தது. இவரது நெற்றி, கழுத்து பகுதியில் லேசான காயங்கள் உள்ளது. அவருடைய உடலையும் போலீசார் கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடலில் காயங்கள் இருப்பதால் கடலில் விழுந்து பாறைகளில் அடிபட்ட காயமா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்