3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

சாராய வியாபாரிகள் உள்பட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்

Update: 2022-06-28 20:19 GMT

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா ஆரலூர் கீழமணக்குடி மெயின்ரோடு பகுதியில் வசித்து வருபவர் குணசேகரன் (வயது49). சாராய வியாபாரி. பந்தலூரை அடுத்த புழுதிக்குடி புதுத்தெருவை சேர்ந்தவர் கோசிமணி மகன் சரண்ராஜ் (29). சாராய வியாபாரி. இதேபோல, திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகா முனியூரை அடுத்த சடையங்கால் கீழ குடியான தெருவை சேர்ந்தவர் முருகையன் மகன் செல்வகுமார் (37). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. குணசேகரன், சரண்ராஜ், செல்வகுமார் ஆகிய 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா, கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் உத்தரவின்பேரில் கும்பகோணம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகந்தி, அம்மாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கரிகாற்சோழன் ஆகிய 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.




Tags:    

மேலும் செய்திகள்