மது விற்ற 3 பேர் கைது

குலசேகரன்பட்டினத்தில் மது விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-06-25 14:18 GMT

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் உடன்குடி பஸ்நிலையம், சந்தை அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு மது விற்றதாக உடன்குடி சிவலூர் மேலத்தெருவை சேர்ந்த சேகர் பாண்டியன் மகன் செந்தில்குமார் (வயது 32), உடன்குடி கீழப்புது தெருவைச் சேர்ந்த அய்யப்பன் மகன் பாலாஜி (32) ஆகியோரை கைது செய்தனர்.

இதேபோல் சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் மற்றும் போலீசார் உடன்குடி- பரமன்குறிச்சி சாலையில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். அருகே மது விற்றதாக உடன்குடி வைத்தியலிங்கபுரத்தை சேர்ந்த செல்லையா மகன் குமார் (45) என்பவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்