மது விற்ற 3 பேர் கைது

மது விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-06-20 19:33 GMT

குளித்தலை சுங்ககேட் மற்றும் பெரியபாலம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்கப்படுவதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் அப்பகுதியில் மது விற்ற மதுரை மாவட்டம் ஆர்.வி.பட்டி பகுதியை சேர்ந்த பாண்டியராஜன் (வயது 47) என்பவரையும், ராமநாதபுரம் மாவட்டம் குருந்தாங்குடி பகுதியைச் சேர்ந்த மனோகரன் (55) மற்றும் பெரியபாலம் பகுதியில் மது விற்ற குளித்தலை மலையப்பநகர் பகுதியைச் சேர்ந்த ராஜலிங்கம் (46) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து மொத்தம் 36 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்