கஞ்சா விற்ற பெண் உள்பட 3 பேர் கைது
கஞ்சா விற்ற பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
முசிறி:
முசிறி கீழத்தெரு பொது குளியலறை அருகில் கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலின்பேரில் அப்பகுதியில் முசிறி போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்தவர்களை போலீசார் வளைத்து பிடிக்க முயன்றனர். இதில் ஒரு பெண் உள்பட 3 பேர் பிடிபட்டனர். 2 பேர் தப்பியோடிவிட்டனர். பிடிபட்டவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் கீழகண்ணுகுளத்தைச் சேர்ந்த பெரியசோழனின் மகன் சுபாஷ்(வயது 19), குருவம்பட்டியை சேர்ந்த செல்லத்துரையின் மகன் அஜித்(19), முசிறி கீழத்தெருவை சேர்ந்த மோகனின் மனைவி விஜயகுமாரி(53) என்பதும், தப்பியோடியவர்கள் முசிறி கீழத்தெருவை சேர்ந்த மோகனின் மகன் சஞ்சய்(23), கர்ணனின் மகன் வசந்த்(21) என்பதும் தெரியவந்தது. இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி வழக்குப்பதிவு செய்து, 3 ேபரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் 3 பேரிடம் இருந்தும் ½ கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.