ஆட்டோ டிரைவரிடம் பணம் கேட்டு மிரட்டிய 3 பேர் கைது

சுத்தமல்லியில் ஆட்டோ டிரைவரிடம் பணம் கேட்டு மிரட்டிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-06-03 20:16 GMT

பேட்டை:

சுத்தமல்லி சத்யா நகரை சேர்ந்தவர் இசக்கி (வயது 29). ஆட்டோ டிரைவரான இவர் சுத்தமல்லி விலக்கு அருகே ஆட்டோவை நிறுத்தியிருந்தார். அப்போது அங்கு வந்த இடைகால் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த மருதுராஜா (22), காசிதர்மம் மெயின் ரோட்டை சேர்ந்த தனுஷ் (20), மேல கல்லூரை சேர்ந்த இசக்கிப்பாண்டி (19) ஆகியோர் சவாரி செல்வதற்காக ஆட்டோவில் ஏறினர். சிறிது நேரத்தில் இசக்கியிடம் அரிவாளை காட்டி மது குடிக்க பணம் கேட்டு மிரட்டினர். இதுகுறித்து சுத்தமல்லி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜ் வழக்குப்பதிவு செய்து மருதுராஜா உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்