தொழிலாளியை தாக்கிய 3 பேர் கைது
தொழிலாளியை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
அறந்தாங்கி கோபாலசமுத்திரத்தை சேர்ந்தவர் நிஜாந்த் (வயது 25). தொழிலாளியான இவர் கடந்த 27-ந் தேதி அக்னிபஜார் கடைவீதியில் உள்ள கடையில் வீட்டிற்கு பொருட்கள் வாங்கி கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அறந்தாங்கி மணிவிலான் பகுதியை சேர்ந்த அன்வர் பாஷா (22), அப்துல் ரஹீம் (27), பேர்ணிஸ்சாமுவேல் (19) ஆகிய 3 பேரும் சேர்ந்து நிஜாந்த்தை வழிமறித்து அவர்களது வண்டியில் ஏற்றிக்கொண்டு இடையார் வெள்ளாற்று பாலத்தின் கீழே வைத்து தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த நிஜாந்த் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில், அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்வர் பாஷா, அப்துல் ரஹீம், பேர்ணிஸ்சாமுவேல் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.