பெரம்பலூரில் கொரோனாவுக்கு 29 பேர் சிகிச்சை

பெரம்பலூரில் கொரோனாவுக்கு 29 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Update: 2022-06-26 18:50 GMT

பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது மீண்டும் கொரோனா பரவி வருகிறது. இதனால் கொரோனாவினால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஏற்கனவே மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு 22 பேர் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று ஒருவர் குணமாகினார். ஆனால் நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 8 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 29 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்