ரெயிலில் 2,800 டன் கோதுமை வந்தன
ராஜஸ்தானில் இருந்து பொள்ளாச்சிக்கு ரெயிலில் 2,800 டன் கோதுமை மூட்டைகள் வந்தன
பொள்ளாச்சி
ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து கடந்த 24-ந்தேதி பொள்ளாச்சிக்கு ஒரு சரக்கு ரெயில் புறப்பட்டது. அந்த ரெயிலில் தனியார் நிறுவனம் மூலம் கோதுமை மூட்டைகள் ஏற்றி அனுப்பப்பட்டன. இந்த ரெயில் நேற்று முன்தினம் மாலை 4.30 மணிக்கு பொள்ளாச்சி ரெயில் நிலையத்தை வந்தடைந்தது.
இதை தொடர்ந்து நேற்று காலை முதல் லாரிகள் வரவழைக்கப்பட்டு கோதுமை மூட்டைகள் பொள்ளாச்சி அருகே மண்ணூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், ராஜஸ்தானில் இருந்து பொள்ளாச்சிக்கு சரக்கு ரெயிலில் 42 பெட்டிகளில் 52 ஆயிரம் கோதுமை மூட்டைகள் வந்தன. சுமார் 2,800 டன் எடை இருந்தது. இந்த மூட்டைகள் 130 லாரிகளில் தனியார் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த பணியில் சுமார் 120 தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.