வாலிபருக்கு 28 ஆண்டு சிறை தண்டனை

10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவாலிபருக்கு 28 ஆண்டு சிறை தண்டனை

Update: 2023-08-04 17:41 GMT

திருப்பூர்

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலை சேர்ந்தவர் சதீஷ் (வயது 27). பெயிண்டராக உள்ளார். இவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 10 வயது சிறுமியை தனியாக அழைத்து சென்று அறையில் அடைத்து வைத்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் காங்கயம் மகளிர் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் சதீசை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. போக்சோ பிரிவுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதம், அடைத்து வைத்து பாலியல் தொந்தரவு செய்த குற்றத்திற்கு 1 ஆண்டு சிறை தண்டனையும், கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்கு 7 ஆண்டு சிறை தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம், இந்த தண்டனையை சதீஷ் ஏக காலத்தில் அனுபவிக்குமாறு நீதிபதி பாலு தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் ஜமீலா பானு ஆஜராகி வாதாடினார்.

---

Tags:    

மேலும் செய்திகள்