இந்து எழுச்சி பேரவையினர் 28 பேர் கைது
இந்து எழுச்சி பேரவையினர் 28 பேர் கைது
தொடர் தேச பிரிவினையை முன்னெடுப்பதாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனை, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். அவருடைய எம்.பி. பதவியை ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி இந்து இளைஞர் எழுச்சி பேரவையினர் தஞ்சை ரெயில் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாகஅறிவித்து இருந்தனர். ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதையடுத்து தடையை மீறி இந்து இளைஞர் எழுச்சி பேரவை நிறுவனர் பழ.சந்தோஷ்குமார் தலைமையில், மாநில பொதுச்செயலாளர் சதீஷ்கண்ணா, மாவட்ட தலைவர் சாய்ரகு, தொழிற்சங்க மாநில செயலாளர் ஹரி, மண்டல பொருளாளர் பிரம்நாத், மாவட்ட பொது செயலாளர் கணேஷ், இளைஞரணி தலைவர் அய்யப்பன் ஆகியோர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக ரெயில் நிலையம் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் தடையை மீீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா தலைமையில் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். இதில் 28 பேர் கைது செய்யப்பட்டனர்.