போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 2,756 வழக்குகள் பதிவு

பெரம்பலூர் மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 2,756 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

Update: 2022-11-03 18:28 GMT

வாகன சோதனை

தமிழகம் முழுவதும் கடந்த அக்டோபர் மாதம் 26-ந்தேதி முதல் புதிய போக்குவரத்து விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி வாகன விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு கூடுதல் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. உதாரணமாக ஹெல்மெட் இல்லாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு முன்பு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது புதிய விதிமுறைப்படி ரூ.1,000 விதிக்கப்படுகிறது.

பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி உத்தரவின்படி போக்குவரத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

2,756 வழக்குகள் பதிவு

அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டுவது, வாகனங்களில் அதிக பாரத்தை ஏற்றி செல்வது, சீட் பெல்ட் அணியாமல் பயணம் செய்வது, ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனங்களை இயக்குவது, மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுவது உள்ளிட்ட போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக மொத்தம் 2,756 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்