நாகர்கோவில்:
தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது படிப்படியாக உயர்ந்து வருகிறது. இதேபோல குமரி மாவட்டத்திலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நேற்று குமரி மாவட்டத்தில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திாி மூலமாகவும், சுகாதார பணியாளர்கள் மூலமாகவும் நடத்தப்பட்ட பரிசோதனையில் மொத்தம் 27 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. அதாவது அகஸ்தீஸ்வரம்-4, கிள்ளியூர்-1, குருந்தன்கோடு-1, மேல்புறம்-2, முன்சிறை-12, நாகர்கோவில்-4, தக்கலை-3 என மொத்தம் 27 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இதில் பெரும்பாலானோர் லேசான தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அவர்கள் தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களை சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகிறார்கள். குமரி மாவட்டத்தில் பாதிப்பு அதிகரித்து வருவதால் பொதுவெளியில் நடமாடும் பொதுமக்கள் முககவசம் அணியும்படி சுகாதாரத்துறையினர் வலியுறுத்தி இருக்கிறார்கள்.