ரூ.23.16 கோடியில் கட்டப்பட்ட 264 அடுக்குமாடி வீடுகள்

ராமநாதபுரத்தில் ரூ.23.16 கோடியில் கட்டப்பட்ட 264 அடுக்குமாடி வீடுகளை பயனாளிகளுக்கு கலெக்டர் வழங்கினார்.

Update: 2023-04-10 18:45 GMT

ராமநாதபுரம், 

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக ராமநாதபுரத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கட்டப்பட்ட குடியிருப்புகளை திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து ராமநாதபுரத்தில் பட்டிணம்காத்தான் ஊராட்சியில் ரூ.23.16 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட 264 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கான ஆணையினை தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் முதல் கட்டமாக 256 வீடுகள் கட்டப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. தற்பொழுது இரண்டாம் கட்டமாக ரூ.23.16 கோடி மதிப்பீட்டில் 264 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. மேலும் வீடு பெற விரும்பும் பயனாளிகள் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் பதிவு செய்து அரசு கட்டணமான ரூ.1 லட்சத்து 99 ஆயிரம் கட்டணம் செலுத்தி குடியிருப்பு ஆணை பெற்று பயன் பெற்றிடலாம் என்றார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய உதவி செயற்பொறியாளர்கள் கேர்லின் ரீட்டா, புஷ்பராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்