மனமகிழ் மன்றத்தில் சூதாடிய 26 பேர் கைது

மனமகிழ் மன்றத்தில் சூதாடிய 26 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-08-18 19:49 GMT

துவாக்குடி சுங்கச்சாவடி அருகே தனியார் மனமகிழ் மன்றம் அரசு அனுமதியுடன் செயல்பட்டு வருகிறது. இங்கு திருவெறும்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவழகன் தலைமையில் துவாக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் மற்றும் போலீசார் அங்கு திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு சூதாடியதாக 26 பேரை போலீசார் பிடித்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.9 ஆயிரத்து 300-ஐ பறிமுதல் செய்தனர்.  

Tags:    

மேலும் செய்திகள்