அவினாசி
கோவை மாவட்டம் அன்னூரில் இருந்து சேலம் நோக்கி நேற்று இரவு வேன் சென்றது. வேனை ராஜ்குமார் (வயது 35) ஓட்டினார். அருகில் சேலம் அண்ணாநகரை சேர்ந்த பிரகாஷ் (27) அமர்ந்திருந்தார். நேற்று காலை 4.30 மணியளவில் அவினாசியை அடுத்து பழங்கரை அருகே வந்த வேன் அங்கு பஞ்சராகி நின்ற லாரி மீது மோதியது. இதில் பிரகாஷ் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ராஜ்குமார் லேசான காயம் அடைந்தார். இதுகுறித்து அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பிரகாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
----