ஸ்ரீரங்கத்தில் வீடு புகுந்து 25 பவுன் நகைகள் திருட்டு

ஸ்ரீரங்கத்தில் வீடு புகுந்து 25 பவுன் நகை மற்றும் பணத்தை திருடிய ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்

Update: 2022-06-03 19:18 GMT

ஸ்ரீரங்கம்,ஜூன்.4-

ஸ்ரீரங்கத்தில் வீடு புகுந்து 25 பவுன் நகை மற்றும் பணத்தை திருடிய ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நகை-பணம் திருட்டு

ஸ்ரீரங்கம் வடக்கு வாசல் பகுதியை சேர்ந்தவர் சுந்தரி (89). இவர் தனித்து வசித்து வருகிறார். இவர் கடந்த புதன்கிழமை மதியம் வீட்டின் கதவில் உள்ள கொக்கி தாழ்ப்பாளைப் போட்டு விட்டு தூங்கி உள்ளார்.

அப்போது மர்ம நபர்கள் கதவின் தாழ்ப்பாளை திறந்து வீட்டுக்குள் புகுந்து பீரோவில் வைத்திருந்த 25 பவுன் நகை மற்றும் ரூ.15 ஆயிரத்தை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து சுந்தரி ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை திருடிய மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்