புகையிலை பொருட்கள் விற்ற மேலும் 25 பேர் கைது

புகையிலை பொருட்கள் விற்ற மேலும் 25 பேர் கைது செய்யப்பட்டனா்.

Update: 2023-01-28 18:45 GMT

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை முற்றிலும் தடுக்கும் விதமாக மாவட்டம் முழுவதும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின்பேரில் போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் நடந்த சோதனையில் புகையிலை பொருட்கள் விற்ற 20 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் நேற்றும் 2-வது நாளாக சோதனை தொடர்ந்து நடந்தது.

இதில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக செஞ்சி அருகே அங்கராயநல்லூரை சேர்ந்த சக்திவேல் (வயது 44), விழுப்புரம் அருகே தாண்டவமூர்த்திக்குப்பத்தை சேர்ந்த கண்ணன் (75), மரக்காணம் ஆலங்குப்பத்தை சேர்ந்த ராஜசேகர் (55), மரக்காணம் சேட்டு (43), செஞ்சி துரை (63), விழுப்புரம் அருகே நரையூரை சேர்ந்த கண்ணன் (70), கோவிந்தபுரத்தை சேர்ந்த செந்தில் (38), கிளியனூர் பாஸ்கர் (54), விக்கிரவாண்டி ரபிதீன் (60), வெட்டுக்காடு பன்னீர்செல்வம் (75) உள்ளிட்ட 25 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்