மெட்ரோ ரெயிலில் ஒரே நாளில் 2.5 லட்சம் பேர் பயணம்
அக்டோபர் மாதத்தை விட நவம்பர் மாதத்தில் ஒரு லட்சத்து 15 ஆயிரம் பேர் அதிகமாக பயணம் செய்துள்ளனர்.
சென்னை,
சென்னை மெட்ரோ ரெயிலில் ஒவ்வொரு மாதமும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த நவம்பர் மாதம் 62 லட்சத்து 71 ஆயிரத்து 730 பேர் பயணித்தனர். அதிகபட்சமாக கடந்த 7-ந் தேதி 2 லட்சத்து 47 ஆயிரத்து 352 பேர் பயணம் செய்தனர்.
அக்டோபர் மாதத்தை விட நவம்பர் மாதத்தில் ஒரு லட்சத்து 15 ஆயிரம் பேர் அதிகமாக பயணம் செய்துள்ளனர். பயண அட்டை பயன்படுத்துபவர் எண்ணிக்கை 3 லட்சத்து 96 ஆயிரத்து 240 ஆக அதிகரித்துள்ளதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.