இந்த முறை தமிழ்நாட்டில் இருந்து 25 பாஜக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்திற்கு செல்வார்கள் - அண்ணாமலை

இந்த முறை தமிழ்நாட்டில் இருந்து 25 பாஜக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்திற்கு செல்வார்கள் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Update: 2022-12-27 16:05 GMT

கோவை,

கோவையில் இன்று பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசுகையில்,

இந்தியாவில் பிரதமர் மோடி 3-வது முறையாக 400 எம்.பி.க்களுக்கு மேலே பெற்று ஆட்சியில் அமரப்போகிறார். தமிழ்நாடு 2 முறை சிறிய தவறை செய்திருக்கின்றோம்.

2014-ல் இங்கிருந்து நாம் பாஜக எம்.பி.க்களை அனுப்ப முடியவில்லை. 2019-ம் ஆண்டிலும் பாஜக எம்.பி.க்களை அனுப்ப முடியவில்லை. அதனால் தான் நமது கட்சி மிக தைரியமாக கூறுகின்றோம்... இந்த முறை பாஜக கட்சியில் இருந்து 25 எம்.பி.க்களுக்கு மேல் தமிழ்நாட்டில் இருந்து நாடாளுமன்றத்திற்கு செல்வார்கள்.

தமிழுக்கு என்ன செய்ய வேண்டும்... தமிழ்நாட்டிற்கு என்ன செய்ய வேண்டும் என்று பிரதமர் துடித்துக்கொண்டிருக்கும்போது நாம் அவருக்கு எம்.பி.யை கொடுக்கும்போது அந்த எம்.பி. மூலமாக நமக்கு என்ன செய்ய வேண்டும் என்று பிரதமருக்கு நிச்சயம் தெரியும்.

இப்போதில் இருந்து அடுத்த 16 மாதத்திற்கு செய்ய வேண்டிய ஒரே வேலை நமது பூத்தை பலப்படுத்த வேண்டும். வீடு வீடாக சென்று பாஜகவினர் பிரதமருக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்க வேண்டும். பாஜக வேட்பாளர்கள் வெற்றிபெற்று கோட்டைக்கு செல்ல வேண்டும். நம்மை நம்பி தான் ஜேபி நட்டா தனது முதல் பயணமாக இங்கு வந்துள்ளார்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்