ரெயிலில் கடத்திய 24 கிலோ கஞ்சா பறிமுதல்

ரெயிலில் கடத்திவரப்பட்ட 24 கிலோ கஞ்சாவை காட்பாடி ரெயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். அதை கடத்தி வந்த வடமாநில வாலிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-08-21 16:30 GMT

ரெயிலில் கடத்திவரப்பட்ட 24 கிலோ கஞ்சாவை காட்பாடி ரெயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். அதை கடத்தி வந்த வடமாநில வாலிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கஞ்சா பறிமுதல்

கஞ்சா கடத்தலை தடுக்க போலீசார் ரெயில்களில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் டாடா நகரில் இருந்து பெங்களூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் காட்பாடி ரெயில் நிலையத்திகு வந்தது. அப்போது காட்பாடி ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையிலான போலீசார் ரெயில் பெட்டிகளில் ஏறி சோதனை நடத்தினர்.

அப்போது சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் 2 பேர் இருந்தனர். அவர்கள் வைத்திருந்த 2 டிராவல் பைகளை போலீசார் சோதனை செய்தனர். அதில் தலா ஒரு கிலோ வீதம் 24 பாக்கெட்டுகளில் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

2 பேர் கைது

விசாரணையில் அந்த வாலிபர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த டிக்கல்சமாத் (வயது 20), சாலுக்கா கொராவ் (28) என்பதும், ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து பெங்களூருக்கு கஞ்சா கடத்தி செல்வது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்