போராட்டத்தில் ஈடுபட்ட 23 விவசாயிகள் கைது

போராட்டத்தில் ஈடுபட்ட 23 விவசாயிகள் கைது

Update: 2022-09-09 12:27 GMT

வெள்ளகோவில்

வெள்ளகோவில் அருகே பகவதிபாளையம் பகுதியில் செல்லும் பி.ஏ.பி. கிளை வாய்க்காலில் திறந்து விடப்பட்ட நீரை 7 நாட்கள் வழங்காமல் 2 நாட்கள் முன்னதாகவே அடைக்க எதிர்ப்பு தெரிவித்து தண்ணீர் அடைப்பதை தடுத்து நிறுத்த நேற்று முன் தினம் வெள்ளகோவில் கிளைக் கால்வாய் பாசன விவசாயிகள் மற்றும் விவசாய சங்கத்தினர் அங்கு குவிந்து மதகு பகுதியில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த போராட்டம் நேற்றும் தொடர்ந்தது.

இதையடுத்து காங்கேயம் துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன், போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் விவசாயிகள் போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 15 ஆண்கள், 8 பெண்கள் மொத்தம் 23 பேரை போலீசார் நாகம நாயக்கன்பட்டியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் வைத்திருந்தனர். பின்னர் காங்கேயம் தாசில்தார் விவசாயிகளின் கோரிக்கைகளை தாராபுரம் சப்-கலெக்டருக்கு அனுப்பி பின்னர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கேட்டுக் கொண்டார். இதை விவசாயிகள் ஒப்புக்கொண்டதால் கைதானவர்களை போலீசார் விடுவித்தனர்.

---

Tags:    

மேலும் செய்திகள்