22 கிலோ கஞ்சா கடத்திய வழக்கு: 2 பெண்களுக்கு 10 ஆண்டு சிறை

22 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் கைதான 2 பெண்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது

Update: 2023-01-23 20:38 GMT


மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கடந்த 2016-ம் ஆண்டில் ரகசிய தகவல் வந்தது. அதன்படி உசிலம்பட்டி-எழுமலை சாலையில் மீனாட்சிபுரம் விலக்கில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 பெண்களிடம் போலீசார் சோதனை செய்தபோது, அவர்களிடம் 22 கிலோ கஞ்சா இருந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், 2 பெண்களை கைது செய்து விசாரித்தனர். இதில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரிந்தது.

இந்த வழக்கு மதுரையில் உள்ள இனக்கலவர தடுப்பு சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. இதில் அரசு தரப்பில் வக்கீல் ராமசுப்பிரமணியன் ஆஜரானார். விசாரணை முடிவில், 2 பெண்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் 2 பேருக்கும் தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்