மூலிகை தைலம் தருவதாக கூறி முதியவரிடம் ரூ.21 லட்சம் மோசடி

நாகையில் மூலிகை தைலம் தருவதாக கூறி முதியவரிடம் ரூ.21 லட்சம் மோசடி செய்யப்பட்டது. இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-06-04 15:03 GMT

வெளிப்பாளையம்:

நாகையில் மூலிகை தைலம் தருவதாக கூறி முதியவரிடம் ரூ.21 லட்சம் மோசடி செய்யப்பட்டது. இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலகை தைலம்

நாகை புதிய கடற்கரை சாலையை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது68). இவர் நாகை முதலாவது கடற்கரை சாலையில் வெளிநாட்டுக்கு பொருட்கள் ஏற்றுமதி செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 7-ந் தேதி சந்திரசேகரன் செல்போன் எண்ணில் தொடர்பு கொண்ட நபர் ஒருவர், தங்கள் நிறுவனத்தில் ஏற்றுமதி செய்யும் அளவிற்கு தரம் வாய்ந்த மூலிகை தைலம் உள்ளது. அந்த தைலம் வேண்டும் என்றால் அதற்கு முன்பணம் கட்ட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

ரூ.21 லட்சத்து 7 ஆயிரம்

இதை நம்பிய சந்திரசேகரன், தனது வங்கி எண்ணில் இருந்து செல்போன் பேசிய நபரின் வங்கி கணக்கிற்கு மூன்று தவணையாக ரூ.21 லட்சத்து 7 ஆயிரத்து 200அனுப்பி உள்ளார். ஆனால் அவர் கூறிய படி மூலிகை தைலம் தரவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த சந்திரசேகரன் மீண்டும் அந்த நபரை தொடர்பு கொண்ட போது அவரது செல்போன் சுவிச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சந்திரசேகரன். நேற்று நாகை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்