21 மூடை ரேஷன் அரிசி வேனுடன் பறிமுதல்
21 மூடை ரேஷன் அரிசி வேனுடன் பறிமுதல்;
விருதுநகர் மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ரகசிய தகவலின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சாமிநத்தம் கிராமத்தில் சோதனை நடத்தினர். அங்கு ஒரு வேனில் தலா 40 கிலோ கொண்ட 21 மூடை ரேஷன் அரிசி இருந்தது. வேன் டிரைவர் கண்ணன் (வயது 21) என்பவரிடம் விசாரித்த போது வீடுகளில் இருந்து ரேஷன் அரிசியை சேகரித்து சங்கரன்கோவில் கோழிப்பண்ணைக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார். போலீசார், வேனுடன் 21 மூடை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்ததுடன் சங்கரன்கோவிலை சேர்ந்த வேன் டிரைவர் கண்ணன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.