திருச்சி விமான நிலையத்தில் உணவு டப்பாவில் கடத்தி வந்த ரூ.20.32 லட்சம் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் உணவு டப்பாவில் கடத்தி வந்த ரூ.20.32 லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-05-15 19:54 GMT

மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து திருச்சி விமான நிலையத்துக்கு நேற்று ஏர் ஏசியா விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, ஒரு ஆண் பயணி கொண்டு வந்த உணவு பொருள் டப்பாவை சோதனை நடத்தியபோது, 330 கிராம் தங்கத்தை ஊசி வடிவில் கடத்தி வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 20.32 லட்சம் ஆகும். மேலும் அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்