கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம்
மடுகரை கூத்தாண்டவர் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
மடுகரை கூத்தாண்டவர் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
தேரோட்டம்
நெட்டப்பாக்கம் அருகே மடுகரையில் கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெறும். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக திருவிழா எளிமையான முறையில் நடைபெற்றது.
இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அரவாண் தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.
வைத்திலிங்கம் எம்.பி., துணை சபாநாயகர் ராஜவேலு ஆகியோர் தேரை வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பக்தி கோஷத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர். கோவில் மாடவீதி, சம்பந்தம் தெரு உள்ளிட்ட தெருக்கள் வழியாக சென்று மீண்டும் கோவிலை தேர் வந்தடைந்தது.
தீமிதி நிகழ்ச்சி
தேரோட்டத்தில் மடுகரை, நெட்டப்பாக்கம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
திருவிழாவில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மாலை தீமிதி நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.