அரசு பேருந்து மோதி தீப்பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிள் - 2 பேர் படுகாயம்

திருவாடானை அருகே அரசு பேருந்து மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிள் தீ பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-05-18 04:29 GMT
தொண்டி,

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே மாங்குடி பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி மகன் கார்த்திக் (வயது 22). இவர் தனது உறவினரான ஹரிகிருஷ்ணன் (19) என்பவருடன்  மோட்டார் சைக்கிளில் ராமேஸ்வரம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது கருமொழி சோதனைச்சாவடி அருகே சென்றபோது எதிரே வந்த அரசுப் பேருந்து பைக் மீது  பலமாக மோதியது.   இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 வாலிபர்களும் சாலையோரத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். 

இதில் அவர்கள் ஓட்டி வந்த பைக் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவாடானை போலீசார் படுகாயம் அடைந்த 2 வாலிபர்களையும் மீட்டு சிகிச்சைக்காக தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்