கோவில் திருவிழாவுக்கு சென்ற பெண் மாயம்
புதுவையில் கோவில் திருவிழாவுக்கு சென்ற போது பெண் மாயமானார்.
புதுவை அரும்பார்த்தபுரத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது35). இவரது மனைவி பாஞ்சாலி (25). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. கணவன்-மனைவி இருவரும், புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர்.
சம்பவத்தன்று பாஞ்சாலி வில்லியனூரில் உள்ள கோவில் திருவிழாவுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.