தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழா மலரை வெளியிட்டார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழா மலரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
சென்னை,
தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழா சிறப்பு மலரை முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று வெளியிட்டார். சட்டப்பேரவை மண்டபத்தில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் இந்த சிறப்பு மலர் வெளியிடப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி சிலை திறப்பு விழா குறித்த சிறப்பு மலரையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
கடந்த ஆகஸ்டு 2-ஆம் தேதி சட்டமன்ற நூற்றாண்டு விழா நடைபெற்றது. அப்போது முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்தை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.