மகளிர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து புதுச்சேரி மாநில மகளிர் காங்கிரஸ் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தினர்.
மத்திய அரசு கியாஸ் சிலிண்டர் விலையை தொடர்ந்து உயர்த்தி வருகிறது. சமீபத்தில் ரூ.50 உயர்த்தப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து புதுச்சேரி மாநில மகளிர் காங்கிரஸ் சார்பில் அண்ணாசிலை அருகில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மகளிர் காங்கிரஸ் தலைவி பஞ்சகாந்தி தலைமை தாங்கினார்.
இதில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், துணை தலைவர் பி.கே.தேவதாஸ், வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் கந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
போராட்டத்தில் கலந்து கொண்ட மகளிர் காங்கிரசார் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், விறகு அடுப்பில் சமைத்தும் தங்களது எதிர்ப்பை காட்டினர்.