தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
புதுவையில் கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
புதுவை கரிக்கலாம்பாக்கம் சுப்புலட்சுமி நகரை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது 38). கூலித்தொழிலாளி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ராஜமாணிக்கத்தின் கால் துண்டிக்கப்பட்டது. இதனால் வேலைக்கு செல்ல முடியாததால், அவர் மனவேதனையில் வீட்டிலேயே முடங்கி இருந்தார்.
ராஜமணிக்கத்தின் மனைவி ஜெகதீஸ்வரி கூலிவேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தி வந்தார். இந்த நிலையில் குடும்பத்துக்கு சுமையாக இருக்க விரும்பாத ராஜமாணிக்கம், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்து கரிக்கலாம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.