மனைவியை கொன்ற தொழிலாளி கைது

திருபுவனை அருகே மனைவியின் கழுத்தை நெறித்து கொலை செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-05-07 16:36 GMT
திருபுவனை அருகே உள்ள கலிதீர்த்தாள்குப்பம் பழனி நகரை சேர்ந்தவர் கலியமூர்த்தி (வயது 53). காய்கறி கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி செந்தமிழ்செல்வி (46). குடும்ப பிரச்சினை தொடர்பாக கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. கடந்த 4-ந்தேதி இரவு மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கலியமூர்த்தி, தனது தோளில் அணிந்திருந்த துண்டால் மனைவியின் கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு தப்பியோடி விட்டார்.
இதுகுறித்து திருபுவனை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கலியமூர்த்தியை தேடி வந்தனர். இதற்கிடையே அதே பகுதியில் பதுங்கியிருந்த அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்