ரோந்து படகுகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்
ரோந்து படகுகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என கடலோர காவல்படை கமாண்டர் அறிவுறுத்தினார்.
தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் கடலோர காவல் படை அலுவலகம் உள்ளது. இங்குள்ள 4 ரோந்து படகுகளில் கடலோர காவல்படையினர் ரோந்து பணி மேற்கொள்வார்கள். மேலும் கடலுக்குள் மீனவர்களுக்கு ஏதேனும் ஆபத்து என்றாலும் அந்த படகுகளில் சென்று மீட்பு பணியில் ஈடுபடுவார்கள். இந்தநிலையில் கடலோர காவல்படை கமாண்டர் வெங்கடேசன் இன்று தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த ரோந்து படகுகளின் நிலை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். படகுகளில் ஏதேனும் பழுது இருந்தால் அதனை விரைவில் சரிசெய்து தயார் நிலையில் வைத்திருக்குமாறு அறிவுறுத்தினார்.