சப் இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு; எதிர் கட்சிகள் பொய் சொல்லவில்லை- சித்தராமையா

சப் இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு குறித்து எதிர்கட்சிகள் பொய் சொல்லவில்லை என்று சட்டசபை எதிர்கட்சி தலைவர் சித்தராமையா கூறினார்.

Update: 2022-05-06 12:54 GMT
கோலார்,

சப் இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு குறித்து எதிர்கட்சிகள் பொய் சொல்லவில்லை  என்று சட்டசபை எதிர்கட்சி தலைவர் சித்தராமையா கூறினார்.

செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த சித்தராமையா கூறியதாவது:- சப் இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு குறித்து எதிர்கட்சியின் கூறி வரும் குற்றச்சாட்டில் பொய் இல்லை. இந்த விவகாரத்தில் எதிர்கட்சியின் உண்மை தகவல்களை கூறிவருகிறோம். 

சப் இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு குறித்து நான் அரசுக்கு கடிதம் எழுத வில்லை. அரசு சார்பில் கால்நடை துறை மந்திரி பிரபு சவான் சப் இன்ஸ்பெக்டர் தேர்வில் முறைகேடு நிகழ்ந்துள்ளது என்று கூறி கடிதம் எழுதினார்.

அப்படியிருக்க தற்போது சப் இன்ஸ்பெக்டர் தேர்வில் முறைகேடு நடக்கவில்லை என்று ஆட்சியாளர்கள் எப்படி கூற முடியும். சப் இன்ஸ்பெக்டர் தேர்வில் முறைகேடு நிகழ்ததால் அரசு போலீசாரை இடமாற்றம் செய்து வருகிறது. இந்த முறைகேட்டுக்கு போலீஸ் மந்திரி அரக ஞானேந்திராவே முழு பொறுப்பு. 

எனவே, அவர் மத்திரியாக இருக்க தகுதி இல்லை. எங்கள் கட்சி ஆட்சி செய்தபோது முறைகேடுகள் நடந்ததில்லை. அப்படியிருந்தும் முறைகேடுகள் நிகழ்ந்தால் உடனே விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது அதேபோல், பா.ஜனதா அரசு ஏன் நீதி விசாரணைக்கு உத்தரவிடவில்லை” என்றார். 

மேலும் செய்திகள்