வேலூர்: வாலிபரை கொலை செய்து கோட்டை அகழியில் வீச்சு...!

வேலூரில் வாலிபரை கொலை செய்து கோட்டை அகழியில் மர்ம நபர்கள் வீசிச் சென்று உள்ளனர்.

Update: 2022-05-06 07:10 GMT
வேலூர்,

வேலூர் கோட்டை அகழியில் இன்று காலை ஆண் பிணம் மிதப்பதாக வேலூர் வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் அகழியில் கிடந்த பிணத்தை மீட்டு மேலே கொண்டு வந்தனர். இதுகுறிதது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை குறித்து போலீசார் கூறுகையில்,

கொலை செய்யப்பட்ட வாலிபரை பெரியார் பூங்காவில் இருந்து இழுத்துவந்து கல்லால் நெற்றியில் தாக்கி கொன்று அகழியில் வீசிவிட்டு சென்று உள்ளனர். கோட்டை அகழியின் மேல் பகுதியில் ரத்தம் ஆங்காங்கு சிதறி இருந்தது. வாலிபரை தாக்கிய ரத்தம் படிந்த கல் ஒன்று கிடந்ததுள்ளது. 

மேலும் வாலிபர் கொலை செய்யப்பட்டு 3 நாட்கள் ஆகி இருப்பதால் பிணம் முழுவதும் அழுகிய நிலையில் இருந்தது. 

முன்விரோத தகராறில் வாலிபரை கொலை செய்து வீசினார்களா அல்லது கள்ளக்காதல் தகராறில் கொலை செய்தார்களா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்