தகராறை சமரசம் செய்த ஓய்வுபெற்ற சட்டசபை காவலர் தாக்கப்பட்டார்
தகராறை சமரசம் செய்த ஓய்வுபெற்ற சட்டசபை காவலர் தாக்கப்பட்டார்
புதுச்சேரி
புதுச்சேரி லலித் தொலாத்திரே வீதியை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி (வயது 62). ஓய்வு பெற்ற சட்டசபை காவலர். இவரது உறவினர் சிவபாலனும், மனைவி சரண்யாவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.
இந்தநிலையில் சம்பவத்தன்று சரண்யா வீட்டிற்குள் புகுந்து சிவபாலன், அவரது நண்பர் தேசிங்கு ஆகியோர் தகராறு செய்தனர். இதை அறிந்த புண்ணியமூர்த்தி அங்கு சென்று அவர்களை சமாதானம் செய்தார்.
அப்போது சிவபாலன், தேசிங்கு ஆகியோர் புண்ணியமூர்த்தியை கட்டையால் தாக்கி கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் சிவபாலன், தேசிங்கு ஆகியோர் மீது பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.