நீலகிரி: உறவுக்கு வர மறுத்த பெண் கத்தியால் குத்தி கொலை - கூலி தொழிலாளி வெறிச் செயல்...!
நீலகிரி அருகே உறவுக்கு வர மறுத்த பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த கூலி தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
கூடலூர்,
நீலகரி மாவட்டம் கூடலூர் அருகே தாம்பத்ய உறவுக்கு வர மறுத்த பெண்னை கத்தியால் குத்தி கொன்ற கூலி தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக போலீசார் கூறுகையில்,
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி பகுதியை சேர்ந்த தம்பதிகள் லட்சுமணன்-பாக்கியம். இவர்கள் கூடலூர் காஞ்சிமரத்து சாலை பயணியர் பங்களா அருகே உள்ள தனியார் தோட்டத்தில் தங்கி கூலி வேலை செய்துவருகின்றனர். இவர்களுக்கு நந்தினி (வயது 26) என்ற மகள் உள்ளார்.
நந்தினிக்கு முதல் திருமணம் முறிந்த நிலையில் ஒட்டன்சத்திரம் பாச்சலூர் பகுதியைச் சேர்ந்த தேதீஸ்வரன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்திலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கணவன்- மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக கணவர் மற்றும் குழந்தையை பிரிந்து தனது தந்தையுடன் கூடலூரில் உள்ள தோட்டத்தில் தங்கி நந்தினி கூலி வேலை செய்துவந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு நந்தினி கத்தியால் குத்தப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அவரை பக்கத்து தோட்டத்து கூலி தொழிலாளர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே நந்தினி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கூடலூர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சை பாண்டியன் மற்றும் போலீசார் விரைந்து வந்து கத்தியால் குத்திய நபர் குறித்து விசாரனை நடத்தினர்.
அப்போது நந்தினியின் செல்போனை ஆய்வு செய்தபோது பக்கத்து தோட்டத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி முத்துச்சாமி செல்போனில் அடிக்கடி பேசியது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் முத்துச்சாமியை கைது செய்து விசாரனை நடத்தினர். அதில், நந்தினியை உறவுக்கு அழைத்தபோது அவர் வர மறுத்ததால் அவரை கத்தியால் குத்தியதாக அவர் ஒப்புக்கொண்டார்.
இதனைத்தொடர்ந்து தெற்கு போலீசார் அவரை கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.