500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்..!
வாய்மேடு அருகே 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிதம்பரேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
நாகை:
நாகை மாவட்டம் வாய்மேடு அடுத்த மருதூர் கிராமத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிதம்பரேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 2 ம் தேதி விக்னேஸ்வர பூஜை,கணபதி ஹோமத்துடன் தொடங்கிய யாகஜலை பூஜைகள் நடை பெற்று வந்தது.
பின்னர் இன்று காலை நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவுற்று மேளதாளம் முழங்க புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பட்டு கோவிலை சுற்றி வலம் வந்து பைரவர் கோவில் சிவாச்சாரியார் சேகர் தலைமையில் சிவாச்சாரியார்கள் கோவில் கலசத்தில் புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதன் பின் கோவில் உள்ளே உள்ள விநாயகர் ,முருகன், சிதம்பரேஸ்வரர் சன்னதிகளில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் அப்பகுதி பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு சிவபெருமானை தரிசனம் செய்தனர்.