ரெயில் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி

சிங்கபெருமாள்கோவில் அருகே நேற்று முன்தினம் இரவு, தண்டவாளத்தை கடக்க முயன்ற தனியார் நிறுவன ஊழியர் ரெயில் மோதி பலியானார்.

Update: 2022-05-03 21:14 GMT
தாம்பரம்,

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 35). தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக மறைமலை நகர்-சிங்கபெருமாள் கோவில் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது, புதுச்சேரி நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி இறந்தார். இதேபோல், செம்பாக்கம் ஹெரிடேஜ் காந்தி நகர், 9-வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் விஷ்ணு (30). இவர் கடைக்கு செல்ல குரோம்பேட்டை-தாம்பரம் சானடோரியம் ரெயில் நிலையம் இடையே தண்டவாளத்தை கடக்க முயன்றார்.அப்போது, கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற மின்சார ரெயிலில் அடிபட்டு பலியானார்.

3 பேர் பலி

அதேபோல், மறைமலை நகர்-சிங்கபெருமாள் கோவில் இடையே, தண்டவாளத்தை கடக்க முயன்ற, 55 வயது மதிக்கத்தக்க நபர், அவ்வழியாக சென்ற, மின்சார ரெயில் மோதி பலியானார்.

கிண்டி-செங்கல்பட்டு ரெயில்வே மார்க்கத்தில் 3 பேர் ரெயிலில் அடிபட்டு பலியான சம்பவங்கள் குறித்து, தாம்பரம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

மேலும் செய்திகள்