வீடு புகுந்து திருட முயன்ற கொள்ளையர்களை ஓட, ஓட விரட்டிய பெண்கள்
வீடு புகுந்து திருட முயன்ற கொள்ளையர்களை ஓட, ஓட விரட்டிய பெண்கள்.
நெல்லை,
நெல்லை கே.டி.சி. நகரில் உள்ள அன்னை நகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி என்ற பால்மணி (வயது 50), ஆட்டோ டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றார். இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் 3 பேர் 2 மோட்டார் சைக்கிள்களில் அங்கு வந்தனர்.
பின்னர் மோட்டார் சைக்கிள்களை அந்த பகுதியில் நிறுத்தி விட்டு சுப்பிரமணியின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கிருந்த பீரோவை உடைத்து பொருட்களை திருட முயன்றனர். அப்போது சுப்பிரமணி தனது வீட்டிற்கு வந்தார். அவர் வருவதை பார்த்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்து வெளியே தப்பி ஓடி வந்தனர்.
இதனை பார்த்த சுப்பிரமணி, ‘திருடன், திருடன்’ என்று கூச்சலிட்டார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதியில் இருந்த பெண்கள் அங்கு ஓடி வந்து கொள்ளையர்களை பிடிக்க ஓட, ஓட விரட்டினார்கள்.
ஆனால், கொள்ளையர்கள் தாங்கள் வந்த ஒரு மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டு விட்டு, மற்றொரு மோட்டார் சைக்கிளில் 3 பேரும் ஏறி தப்பி சென்று விட்டனர்.
இந்த காட்சிகள் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.