ஒரு நல்ல மருத்துவரின் சேவையை மக்கள் இழந்துவிடக்கூடாது என்பதே கவலை - ப.சிதம்பரம் டுவீட்

மதுரை மருத்துவக் கல்லூரியில் தவறான உறுதிமொழியை வாசித்ததற்கு காங்கிரஸ் முன்னாள் எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2022-05-02 07:24 GMT
சென்னை,

மதுரை மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டு புதிதாக சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அதில் தவறுதலாக உறுதிமொழி ஏற்றதாக சர்ச்சை எழுந்த விவகாரத்தில் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் ரத்தினவேல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார். 

இந்த நிலையில்ம் இந்த சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் எம்.பி., ப.சிதம்பரம் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

“மதுரை மருத்துவக் கல்லூரியில் முதலாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சியில் தவறான உறுதிமொழியை மாணவர் தலைவர் வாசித்து அதை மாணவர்கள் ஏற்ற நிகழ்ச்சி கண்டனத்திற்குரியது, வருத்தம் அளித்தது. 

டீன் டாக்டர் ரத்தனவேலு அவர்கள் கொரோனா காலத்தில் சிவகங்கை தலைமை மருத்துவ மனையில் மிகச் சிறப்பாகப் பணியாற்றினார் என்பதை நானும் சிவகங்கை மாவட்ட மக்களும் அறிவோம்.

மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்னவேலுவுக்கு தெரியாமல் பிழை நடந்திருந்தால் அவரைப் பொறுப்பாக்கக் கூடாது. ஒரு நல்ல, மூத்த டாக்டரின் சேவையை மக்கள் இழந்துவிடக்கூடாது என்பதே என் கவலை” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்