மே தின கிராம சபை கூட்டம்
சின்னபாபுசமுத்திரத்தில் மே தின கிராம சபை கூட்டம் நடந்தது.
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியம் சின்னபாபு சமுத்திரம் கிராமத்தில் மே தின சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. ஒன்றியக்குழு தலைவர் ஆர்.எஸ்.வாசன் கலந்து கொண்டு கிராம சபை கூட்டத்தை தொடங்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன், சின்னபாபு சமுத்திரம் கிராம பஞ்சாயத்து தலைவர் தனம் அருளரசன், ஒன்றியக்குழு துணை தலைவர் நஜீராபேகம் தமின், மாவட்ட கவுன்சிலர் பணிமொழி செல்வரங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கிராமப்புற அளவில் சுத்தமான குடிநீர் வினியோகம் செய்தல், கால்வாய்களை மேம்படுத்துதல், கிராமப்புற விவசாயிகள், இளைஞர்களுக்கு சிறு தொழில் தொடங்க கடன் உதவிகள் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் வினோத்குமார், இடைநிலை சுகாதார பணியாளர் பிரியா உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கிராம செயலர் புருஷோத்தமன் செய்திருந்தார்.