தமிழகத்தின் உட்கட்டமைப்பு வளர்ச்சிக்கு நெடுஞ்சாலைத்துறை தான் முக்கிய காரணம் - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தின் உட்கட்டமைப்பு வளர்ச்சிக்கு நெடுஞ்சாலைத்துறை தான் முக்கிய காரணம் என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Update: 2022-05-01 15:42 GMT
சென்னை,

சென்னை, கிண்டியில் நெடுஞ்சாலைத் துறையின் 75-வது ஆண்டு பவள விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். பவளவிழா நினைவுத் தூணை திறந்து வைத்த முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு சாலை மற்றும் பாலப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

மேலும் முதல் அமைச்சர், கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் பாறையை இணைக்கும் கண்ணாடி இழை நடைபாதை பணிக்கு அடிக்கல் நாட்டினார். 

இந்த விழாவில் பேசிய முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், நாட்டின் சிறந்த மேம்பாலங்களில் ஒன்றாக இன்றும் திகழும் அண்ணா மேம்பாலம் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் திட்டமிட்டு கட்டப்பட்டது என்று கூறினார். மேலும் நெல்லை ஈரடுக்கு மேம்பாலம் இந்தியாவின் முதல் ஈரடுக்கு மேம்பாலம் என்ற பெருமையை பெற்றுள்ளது என்றார்.

மேலும் அவர் பேசும்போது, சாலைகள் தரமானதாக இருந்தால் மக்களின் பாராட்டு, அரசுக்கு தானாகவே கிடைக்கும். தமிழகத்தின் உட்கட்டமைப்பு வளர்ச்சிக்கு நெடுஞ்சாலைத்துறை தான் முக்கிய காரணம் என்று கூறினார்.

மேலும் செய்திகள்