பிரதமர் மோடியின் ஆலோசனை கூட்டத்தில் ரங்கசாமி பங்கேற்பு
கொரோனா பரவல் சூழ்நிலை குறித்து பிரதமர் மோடி நடத்திய ஆலோசனை கூட்டத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமியும் பங்கேற்றார்.
கொரோனா பரவல் சூழ்நிலை குறித்து பிரதமர் மோடி நடத்திய ஆலோசனை கூட்டத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமியும் பங்கேற்றார்.
பிரதமர் ஆலோசனை
நாட்டில் தற்போதைய கொரோனா பரவல் சூழ்நிலை குறித்து பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்- மந்திரிகளுடன் இன்று காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமியும் தனது அலுவலகத்தில் இருந்து பங்கேற்றார். இதில் தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், சுகாதாரத்துறை செயலாளர் உதயகுமார், இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு ஆகியோரும் கலந்துகொண்டனர்.
தற்போதைய நிலைமை
அப்போது புதுச்சேரியில் கொரோனா பரவலின் தற்போதைய நிலைமை குறித்தும், கொரோனா பரவலை தொடர்ந்து கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் விளக்கப்பட்டது.
மேலும், வருங்காலங்களில் கொரோனா பரவல் அதிகரித்தால் அதனை எதிர்கொள்வதற்கு தேவையான மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்தும், புதுச்சேரியில் இதுவரை எவ்வளவு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.