ஜல்லிக்கட்டு போட்டியின் போது காளையர்களிடம் சிக்காமல் சீறிப்பாய்ந்த காளைகள்....!

விருதுநகர் அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியின் போது காளையர்களிடம் சிக்காமல் காளைகள் சீறிப்பாய்ந்தது.

Update: 2022-04-27 11:45 GMT
காரியாபட்டி, 

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே நெல்லிக்குளம் வீரசூரய்யா மற்றும் அழகுநாச்சியம்மன் கோவில் உற்சவத்தை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது.

இந்த ஜல்லிக்கட்டு விழாவிற்கு திருச்சுழி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து காளைகள் அழைத்து வரப்பட்டது. 

கால்நடை மருத்துவக் குழுவினரால் காளைகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது. 

காலை 9.00 மணியளவில் முதலாவதாக கோவில் காளைகள் மற்றும் நேர்த்திக்கடன் மாடுகள் அவிழ்த்து விடப்பட்டது. அதன்பிறகு ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டதும் சீறிப்பாயந்த காளைகளை வீரர்கள் போட்டிபோட்டு அடக்கினர். 

மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளை உரிமையாளர்களுக்கு பீரோ, கட்டில், மிக்சி, பிரிட்ஜ், சைக்கிள் மற்றும் ரொக்கத் தொகை பரிசாக வழங்கப்பட்டது. 

ஜல்லிக்கட்டு போட்டியின் போது மாடுகள் முட்டியதில் 25-க்கு மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். 

மேலும் செய்திகள்