ஆறுமுகசாமி ஆணையத்தில் புகழேந்தி ஆஜர் - விசாரணை தொடக்கம்
அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தியிடம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
சென்னை,
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது. இந்த ஆணையத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி மனு அளித்திருந்தார்.
கடந்த 19 ஆம் தேதி ஆறுமுகசாமி ஆணையத்தில் புகழேந்தி ஆஜராகியிருந்தார். அதனை தொடர்ந்து ஏப்ரல் 26 ஆம் தேதி மீண்டும் ஆஜராகுமாறு அவரிடம் கூறப்பட்டிருந்த நிலையில், இன்று மீண்டும் ஆறுமுகசாமி ஆணையத்தில் புகழேந்தி ஆஜராகி விளக்கமளித்து வருகிறார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக இதுவரை 156 பேரிடம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தியுள்ளது. அதே போல சசிகலா தரப்பு, அப்போலோ மருத்துவமனை தரப்பு விசாரணைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி இறுதி அறிக்கையை விரைவில் தயார் செய்து தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.