அரசுக்கும், கவர்னருக்கும் இடையே சுமுக உறவு இருந்தால்தான் தமிழ்நாட்டுக்கு நல்லது
அரசுக்கும், கவர்னருக்கும் இடையே சுமுக உறவு இருந்தால்தான் தமிழ்நாட்டுக்கு நல்லது என்று அன்புமணி ராமதாஸ் எம்.பி. தெரிவித்தார்.
சென்னை,
சென்னையில் தமிழ்நாடு அரசு அலுவலர் மற்றும் பணியாளர்கள் உரிமை நலச்சங்கம், தமிழக ஆசிரியர்கள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்ற சங்க தொடக்க விழாவில் பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், ‘சினிமாவில் அரசியல்வாதிகளையும், அரசாங்க ஊழியர்களையும் தவறாக காட்டுகிறார்கள். ஆகவே நீங்கள் உணர்வுப்பூர்வமாக பணியாற்றவேண்டும்' என்றார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
யார் ஆட்சிக்கு வந்தாலும், நாங்கள் மின் மிகை மாநிலமாக மாற்றுவோம் என்று சொல்கிறார்கள். ஆனால் அது நடக்கவில்லை. தற்போது அறிவிக்கப்படாத மின்வெட்டு உள்ளது. இதற்கு நிலக்கரி பற்றாக்குறை ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. அதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து இருக்கவேண்டும். இப்போது மாணவர்களுக்கு தேர்வு காலம். எனவே அரசு மின்வெட்டு இல்லாத சூழலை உருவாக்க வேண்டும்.
செயல்திட்டத்தை வெளியிடவேண்டும்
மாணவர்கள் ஆசிரியர்களை தாக்க முயற்சிப்பது தவறு. 30 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்கள் மீது மிகுந்த மரியாதை நிலவியது. ஆனால் இப்போது குறைந்து வருகிறது. நாங்கள் படிக்கும் காலத்தில் நீதி போதனை வகுப்பு இருந்தது. அது இப்போது இல்லை. அதற்கு ஆசிரியர்கள் பற்றாக்குறையும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது.
தற்போது மது கலாசாரம் அதிகமாகி வருகிறது. குறிப்பாக பள்ளிக்கூட மாணவிகள் சீருடை அணிந்து மது குடிக்கும் வீடியோ வெளியானது வேதனை அளிக்கிறது. தமிழக அரசு மது சம்பந்தமாக கொள்கை முடிவு எடுத்து, பூரண மதுவிலக்கை கொண்டுவருவதற்கு ஒரு செயல்திட்டத்தை வெளியிட வேண்டும்.
சுமுகமான உறவு
மக்கள் உணர்வு அடிப்படையில்தான் ஒரு அரசாங்கத்தை தேர்வு செய்கிறார்கள். அரசாங்கம் என்பது மக்களின் உணர்வு. தற்போது ‘நீட்’ உள்பட பல்வேறு பிரச்சினைகளில் மக்களின் உணர்வை கவர்னர் புரிந்துகொள்ளவேண்டும். கவர்னரின் தேநீர் விருந்தை இந்த அரசும் புறக்கணித்து இருக்கக்கூடாது. அரசுக்கும், கவர்னருக்கும் இடையே சுமுகமான உறவு இருந்தால்தான் தமிழ்நாட்டுக்கு நல்லது.
இவ்வாறு அவர் கூறினார்.